தேங்காய்பால் பாயாசம் …

தாய்ப்பாலுக்கு பிறகு மனிதனுக்கு உகந்தது தேங்காய் பால் தான்..

தாய்ப்பாலைபோல் இதுவும் எளிதில் செரித்து நம் உடலுக்கு பல வகையில் பயனளிக்கும்..

உடலின் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும் தேங்காய்ப்பால் எடுத்து அதில் பாயசம் செய்து பாருங்கள்..

சுவையான தேங்காய்ப்பால் பாயசம் செய்து உண்ணுங்கள்…

Sakertoknow - உணவு

சமைக்க தேவையானவை

தேங்காய் – ஒன்று (பெரியது)
பச்சரிசி – அரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
வெல்லம் – கால் கிலோ
காய்ந்த திராட்சை – 10 கிராம்
முந்திரி – 10 கிராம்
உணவு செய்முறை : தேங்காய்பால் பாயாசம்
Step 1.
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.

Step 2.
மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.

Step 3.
நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும். கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.

சுவையான தேங்காய்ப்பால் பாயசம் செய்து உண்ணுங்கள்…

Leave a Reply