​மாங்காய் -பச்சடி….

தேவையான பொருட்கள் :
மாங்காய்  2 கப்  ( தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது )
வெல்லம்  1.5  கப் 
மிளகாய் தூள்  1 மேஜைக்கரண்டி 
 தாளிக்க 
  எண்ணெய்  1 மேஜைக்கரண்டி 
கடுகு  1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்  2
கறிவேவப்பிலை  1 கொத்து 
பெருங்காயம் 1 சிட்டிகை 
செய்முறை 
1. வடைச்சட்டியில் தண்ணீர்  1 கப் ஊற்றி கொதிக்க விடவும் அதில் நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும் அதில் மஞ்சள் தூளை சேர்த்து வேக விடவும். 
2. இன்னொரு வடைச்சட்டியில் வெல்லத்தை பொடியாக்கி தண்ணீர் விட்டு காய்ச்சவும்,  வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைத்து கரைசலை வடிகட்டவும். 
3. பின்னர்  முதல் வடைச்சட்டியில் மாங்காய் துண்டங்கள் முக்கால் பாகம் வென்று விட்டதா என்று சரிப்பாருக்கவும். 
4. அதன் பின்னர் வெந்த மாங்காய் துண்டுகளுடன் வெல்ல கரைசலை சேர்க்கவும் இந்த கரைசல் கொதிக்க ஆரம்பித்தவுடன் மிளகாய் தூளை சேர்க்கவும்.
5. நன்கு கொதித்து மாங்காயும் நன்கு வெந்து குழைந்தவுடன் வெல்ல கரைசலும் ஒன்றாக கலந்து பஞ்சாமிர்த பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து ஆறவைக்கவும். 
6. இன்னொரு சிறிய வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கடுகு வெடித்ததும் , கறிவேப்பிலை,  காய்ந்த  மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மாங்காய் கலவையில் சேர்த்து கிளறி இறக்கவும். 
குறிப்பு :
1. ஃபிரிஜ்ல் எடுத்து வைத்தால் அனைத்து வகையான உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். 
2. இனிப்பு,  காரம்,  புளிப்பு மூன்றும் சேர்ந்து ஒரு புது வகையான சுவையை தரும்…

Leave a Reply