முளைக்கட்டிய பயறு பொங்கல்!!

அரிசி – ஒரு கப்
முளைக்கட்டிய பயறு – அரை கப்
பச்சை பட்டாணி – அரை கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
உப்பு – ஒரு தேக்கரண்டி
 
முதல் நாள் காலையில் பயறுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இரவு தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்கவும்.
மறுநாள் முளைக்கட்டிய பயறுடன் மற்ற தேவையானப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி, முளைக்கட்டிய பயறு, பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி ஒரு முறை கிளறி மூடி வேகவிடவும். 15 நிமிடங்கள் கழித்து அரிசியுடன் சேர்ந்து அனைத்தும் வெந்ததும் இறக்கிவிடவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம் போட்டு பொரியவிடவும்.
பொரிந்ததும் அதைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.
சுவையான, ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு பொங்கல் தயார். பொங்கல் சாம்பாருடன் பரிமாறவும்.
🌀

Leave a Reply