வாசி யோகம்-2*

*வாசி யோகத்தின் சிறப்பு…*
அந்நெறி இந்நெறி என்னா தட்டங்கத்
தன்னெறி சென்று சமாதியில் நிலமின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் லேகலாம்
புன்னெறி யாகத்திற் போகில்லையாமே
-திரு மூலர் திரு மந்திரம் . 
உலகில் பலவிதமான யோகா நெறிகள் உண்டு . அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அட்டாங்கம் என்ற வாசி யோகா நெறியை கடை பிடியுங்கள் . அதில் சமாதி நிலை அடையுங்கள் . இதனால் ஞானம் அடையலாம். யாகம் போன்ற தவறான வழியால் இறைவனை அடைய முடியாது .
வாசியோகம் செய்வதால் யோக சித்தி யுடன் காய சித்தி , வேதை சித்தி , ஞான சித்தி கிடைக்கும் . வாசி யோகம் செய்யாது பிற சித்தி அடைய முடியாது . . அணைத்து சித்திகளுக்கும் வாசி யோகமே அடிப்படை .
 இதை திரு வள்ளுவர் பஞ்ச ரத்தினம் என்ற நூலில் பாடல்  சொல்லியுள்ளார் .
அட்டாங்க யோகம் அது பலித்திட அருளும் முக்தி 
தொட்டங்கு நின்று துணைய இயம, நியம , ஆசனம்
பட்டாங்கில் உள்ளபடி பாவிக்கதற்கு
முட்டாகும் முப்பு முடியாது மொழிந்தேன் இது சத்தியம் .
அட்டாங்க யோகம் என்ற வாசி யோகத்தை தக்ஷனா மூர்த்தி ,  சுப்பிரமணியர் , அகத்தியர் , திரு மூலர் , போகர் , ரோமர், காக புசுண்டர், திருவள்ளுவர் மற்றும் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். விஷ்ணு புராணத்தில் பராசர முனியும் , யோக சூத்திரத்தில் பதஞ்சலியும் சொல்லி உள்ளார்கள் .
எனவே உறுதியான உடல் பெற , உயர்ந்த அறிவு பெற , நிறைந்த சக்தி பெற , அறவழியில் நிறைந்த பொருள் ஈட்ட , நிறைவான இல்லறம் நடத்த , அமானுஷ்ய சக்தி பெற உள்ளுறை இறைவனை அறிய , காய சித்தி பெற வேதை சித்தி பெற , ஞானம் சித்தி பெற வாசி யோகம் செய்தல் அவசியம். 
வாசி யோகத்தின் ஒவ்வொரு அங்கமாக பாப்போம் . படிப்படியாக வாசி யோகம் செயல்முறைகளை அடுத்து பார்போம்..

Leave a Reply