குளிகை நேரத்தில் செய்யும் எதுவும் வளர்ந்து கொண்டே இருக்கும்…!!!

இறந்தவர்களை இடுகாட்டுக்கு தூக்கும்போது குளிகை நேரத்தில் எடுக்ககூடாது என்று சொல்வது  ஏன் என்றால்,இந்த குளிகை நேரத்தில் செய்கின்ற எதுவும் திரும்ப திரும்ப நடக்கும் என்பதினால்தான்…
குளிகை காலத்திற்கு அத்தகைய ஒரு சக்தி இருக்கிறது…
இதிலே ஒரு அதி சூட்சமம் உள்ளது…
இந்த குளிகை நேரத்தை நல்ல காரியத்துக்கு அதிகம் 
பயன்படுத்துவோர் பெருத்த லாபம் அடைவர்..குளிகையில் நிலம் சொத்துக்களும் வாங்குவோர்  மீண்டும் மீண்டும் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்…. 
பொதுவாக நாம் வாழ்கையில் எது எது மீண்டும் மீண்டும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ , எது எது வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை எல்லாம் குளிகை நேரத்தில் செய்து வர பலன் பன்மடங்கு பெருகும்..
ஆனால் ஒன்று…இந்த குளிகன் நேரத்தில் மட்டும் கடன் வாங்குவதை கண்டிப்பாக தவிர்கவும்..
இந்த நேரத்தில் கடன் வாங்கினீர்கள் என்றால் திரும்ப திரும்ப வாங்கும்படி ஆகிடும்!!
குளிகனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது…அதுதான் மாந்தி…
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 – 04.30
திங்கள் = 01.30 – 03.00
செவ்வாய் = 12.00 – 01.30
புதன் = 10.30 – 12.00
வியாழன் = 09.00 – 10.30
வெள்ளி = 07.30 – 09.00
சனி = 06.00 – 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 – 10.30
திங்கள் = 07.30 – 09.00
செவ்வாய் = 06.00 – 07.30
புதன் = 03.00 – 04.30
வியாழன் = 01.30 – 03.00
வெள்ளி = 12.00 – 01.30
சனி = 10.30 – 12.00

Leave a Reply