​ஐஸ் பாக்ஸ் கேக் 🍰(without egg)

தேவையான பொருட்கள்
மேரி பிஸ்கட் – 20
தண்ணீர் – 1/2 கப்
காஃபி பவுடர் – 1 tblsp
கோகோ பவுடர் – 2 tblsp (ஒவ்வொரு லேயரிலும் தூவுவதவர்க்கு)
ஃப்ரஸ் கிரீம் – 200 மில்லி
சீனி பொடித்தது – 200 கிராம்
பட்டர் – 100 கிராம்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் – 1 tsp
செய்முறை..
1. அரை வெப்ப நிலையில் உள்ள பட்டருடன் பொடி செய்து வைத்த சீனி சேர்த்து பிளண்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.
2. பின் இதனுடன் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து மீண்டும் நன்கு அடிக்கவும்.
3. வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து அடித்து தனியாக வைக்கவும்.
4. ஒரு பவுலில் தண்ணீர் எடுத்து, அதில் 1tblsp காஃபி பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.
5. பிஸ்கட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும்.
6. ஒரு பாக்ஸ் எடுத்து, அதில் முதல் லேயர் தயார் செய்ய, பிஸ்கட்களை காஃபி தண்ணீரில் முக்கி பாக்ஸில் அடுக்க வேண்டும். சிறு சிறு இடங்கள் இருப்பின் அதில் பிஸ்கட்களை உடைத்து சமன் செய்யவும்.
7. இதன் மேல் பிளண்ட் செய்து வைத்த கிரீமை சிறிதளவு ஊற்றவும். பின் கோக்கோ பவுடரை அரிப்பால் அரித்து தூவவும்.
8. இதே போல், காஃபி தண்ணீரில் முக்கிய பிஸ்கட், கிரீம், கோக்கோ பவுடர் என்று 4 முதல் 5 வரை லேயரை தயார் செய்யவும்.
9. இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால்..
அட்டகாசமான சுவையில் புதுமையான ஐஸ் பாக்ஸ் கேக் தயார்.

Leave a Reply