வாசி யோகம்-1*

*வாசியோகம் ஏன் செய்ய வேண்டும் .?*
மனித பிறவியில் ஒவவோருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள் !.
*1.காய சித்தி :* அழியும் உடலை அழியாமல் பாது காத்தல்..
“அடங்கினால் ஒன்றும் இல்லை வருவதேது .
அச்சடத்தை வாழ்வித்தால் அவனே சித்தன் “ >>>
அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் ௪௫ மற்றும் ௪௬
*2. வேதை சித்தி ::*
ஒரு பொருளின் அனுதன்மையை மாற்றுதல் . மதிப்பு குறைந்தவற்றை மதிப்பு மிக்கதாக மாற செய்தல் , பயன்படுத்தல், அறவழி பொருள் ஈட்டல் . ஆகியவை வேதை சாகா மருந்து என்ற முப்பூ செய்து முடித்தல் வேதை சித்தி .
*3. யோகசித்தி .*  யோகா என்றால் இணைத்தல் என்று பொருள் . பொருள்களை இணைத்து புதிய பொருள் பெறுவது வேதை. அழியும உடலை அழியா உடலாக மாற்ற இறைவனோடு இன்னைத்தல் காய சித்தி
இறைவனோடு இணைந்து ஒன்றிப்போதல் ஞானம் .. இம்முன்றையும் பெறுவதற்கான தொழில் நுட்பம் சொல்வது யோகா .இதில் வெற்றி பெறுதல் யோகசித்தி ..
*4. ஞான சித்தி .;* இதுவே முக்தி . காய சித்தி , வேதை சித்தி, யோகசிததி அடைய வேண்டும் . தன்னுள் இறைவனை ஒளி வடிவில் கண்டு , இறைவனுடன் ஒன்றி, நிலைத்த பேரின்பம் பெற்று , இறைவனாக ஐந்தொழில் செய்தல் (படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).
*வாசியோகா :*
*****************
யோகா என்பதில் பலவிதங்கள் உண்டு . இந்தியர் களின் யோகாவில் முக்கியமானவை 
*பக்தி யோகா-* இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல்
*ஹடயோஹா-* உடலை பேணி பலவித பிராணாயாமம் செய்து , பந்த்ம் . முத்திரை , கிரியை ஆகிய முறைகளை பின்பற்றி இறைவனை அடைதல்
*கர்ம யோகம்-* நமது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்பணித்து செய்தல் .அதன் மூலம் இறைவனை அடைதல் .
*வாசி யோகம்-* இதற்கு அஷ்டாங்க யோகம் , குண்டலி யோகம் , ராஜ யோஹம் , ஆகிய பெயர் உண்டு இதை சிறிது மாற்றி கிரியயோகம் என்றும் சொல்லுவார்கள் .
வாசி யோகத்தில்  அங்கங்கள் உண்டு. அவை இயம, நியம , ஆசன , பிரணயாம , தாரண , தியான , சமாதி . .
வாசி என்பது காலக் கணக்கோடு , நெறிப்படுத்திய சுவாசம் ,. இந்த நெறிபடுத்திய சுவாசத்தை பயன் படுத்தி . குண்டலினி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிர செய்வது . இந்த வலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன் இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும் . இந்த சக்திகள் சிததி எனப்படும் . சித்திகள் ௬௪ இருந்தாலும் அவ் சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும் . அமிர்தம் என்ற சாக சுரப்பை வாலைகொடுக்கும் . இதுவே உடலை அழியாமல் காக்கும்.

Leave a Reply