ஓம்  சிவாய  நமக!! திருமணம்!!!

 
….
திருமணங்கள் 
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது …
இதன்  அர்த்தம்  என்ன…???
….
இதை  அறிய 
சொர்க்கம்  நரகம் 
பற்றி 
ஞானமார்க்கமான  புரிதல்  தேவை  …

கனவுமார்க்கமான 
சொர்க்கம்  நரகம்  வேறு …
சத்யமார்க்கமான 
சொர்க்கம்  நரகம்  வேறு  ….
ஸ்தூலமாக 
ஸ்தூலமான  சொர்க்கம்  நரகம்  வேறு…

கனவுமார்க்கமான புரிதலில் 
பயம்  இருக்கும் …
ஸ்தூல மாரக்கமான  புரிதலில் 
ஞானம்  இருக்கும்….
ஞானமார்க்கமான புரிதலில் 
சத்யம்  
சத்  ஓம்  இருக்கும் 
சிவம்  இருக்கும்  ….
….
திருமணம் 
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றால் 
பிறவி  எங்கே  நிச்சயிக்கப்படுகிறது …?
இங்கே 
தெளிவு  பெற்றால்
திருமணங்கள் புரிந்து  விடும்.  
….
இரவு  பகல் 
நன்மை  தீமை 
ஆண்  பெண்  போல 
ஸ்தூலம்  சூட்சமம்  அறிய வேண்டும். 

உடலில் 
ஸ்தூல உடல்  உண்டு 
சூட்சம  உடல்  உண்டு. 
அதைப்போல 
உலகில் 
ஸ்தூல  உலகம்  உண்டு 
சூட்சம   உலகம்   உண்டு  .
சொர்க்கத்தில் 
ஸாதூல  சொர்க்கம்  உண்டு 
சூட்சம      சொர்க்கம்  உண்டு .
நரகத்தில் 
ஸ்தூல  நரகம்  உண்டு 
சூட்சம   நரகம்   உண்டு .
இது  புரிந்தால்  தான் 
சொர்க்கம்  நரகத்தின் 
உண்மை  தன்மை  புரியும். 
….
ஸ்தூல  உடலின்
வாழ்வில்  காணும் 
இனிமை  துன்பம் 
ஸ்தூல  
சொர்க்க  நரகமாகும்…

சூட்சம உடலில்  காணும் 
இனிமை  துன்பம் 
சூட்சம 
சொர்க்கம்  நரகம்  ஆகும் .
….
ஆனால் 
கவனிக்க  வேண்டிய  ஒரு  விஷயம் 
பிறந்த பின் 
வாழ்வில்  வரும் 
சொரக்கமும் நரகமும்  மனம்  வசமே..
ஆனால் 
அந்த  மனம்  இருப்பது 
சூட்சம  உலகிலே  உடலிலிலே..
அப்படி  என்றால் 
பிறந்த  பின்  வரும் 
சொர்க்கம்  நரகம் 
சூட்சம  உலகின்  கட்டுப்பாட்டில் இருப்பது 
தெளிவாக  தெரியவரும். 
….
மனிதன் 
உயிர்கள் 
பூமியில் 
பிறப்பதற்க்கு முன்பே 
பூமியில் 
பஞ்ச  பூதமும்  வைத்து 
உண்ண 
வாழ 
வழியும்  பூமியில்  வைத்தது  இயற்க்கை 
அதாவது  சூட்சம  உலகம். 

அதைப்போல 
பூமியில் 
ஒரு  உயிர்  பிறப்பதற்கு  முன்பே 
அந்த  உயிருக்கான உறவுகளையும் 
பிறக்க  வைப்பது  இயற்க்கை சிறப்பே. 

ஒரு  உயிருக்கு 
தாய்  தந்தை 
கணவன்  மனைவி 
மக்கள்  ..சொந்தங்கள் 
எதிரி  நண்பன் 
நாடு  ஊர் 
முகம்  நிறம் 
குணம்  வளம் 
பிறப்பு  இறப்பு 
இவை  எல்லாம் 
பூரணமாக  தீர்மினிக்கப்பட்டவை .

எங்கே  தீர்மானிக்கப்பட்டது….?

சூட்சம  நரகத்தில். 

இந்த  சூட்சம  நரகம் 
என்பதே 
கர்ம  லோகம்…

இறந்த பின் 
மறுமையில்  ஒரு  உயிருக்கு 
கர்ம  கணக்கு  வகையில் 
தீர்மினிக்கப்பட்டவை  இவை  …

அப்படி  என்றால் 
சொர்க்கத்தில்  தீர்மானிக்க பட்டவை  எவை…?

இரண்டு  திருமணங்கள் 
சொர்க்கத்தில்  தீர்மானிக்கப்படுகிறது..
இந்த  சொர்க்கம்  என்பதே 
சிவ  லோகமே  
….
ஒரு  தீர்ப்பு  
முழுமையாக  வேண்டும்  எனில் 
வழங்கப்பட்ட  தீர்ப்பு 
செயல்  வடிவில்  
நிறைவேற்றப்படவேண்டும் ..

கர்ம லோகத்தில் 
அறங்கேற்றிய  தீர்ப்பு 
சிவ  லோகத்தில் நிறைவேற்றப்படுகிறது …

இந்த  வகையில் 
உண்மையில் 
சொரக்கமும்  நரகத்தில் தான் 
தீர்மானிக்கப்படுகிறது 
என்ற  யதார்த்த  சத்யம்  புரியும். 
சொர்க்கம்  பிறப்பது  நரகத்தில் 
நரகம்  பிறப்பது  சொர்க்கத்தில் 
என்ற  தத்துவமும்  புரிய  வரும். 
….
சொர்க்கத்தில் 
நிறைவேற்றப்பட்ட இரண்டு  திருமணங்கள் 

ஒன்று  கரு  மணம் …
….
தாயின்  கருப்பையில் 
உடலுக்கும் 
உயிருக்கும் 
நடக்கும்  திருமணமே 
கருமணம் …
இங்கு 
உயிரே  சிவம் 
உடலே  சக்தி  
….
எந்த  உயிருக்கு 
எந்த  மாதிரியான  தாய்  தந்தை  உடல் 
என்பது 
சிவ லோகத்தில்  நிறைவேற்றப்படுகிறது. 

இரண்டாவது  திருமணம் 
..
பிறந்த  உயிர் 
இள மையாக  
இல்லறத்தில் 
நல்லறமாக்க 
சிவத்தை 
சக்தியோடு இணைப்பதே 
பூமியில்  நடக்கும் 
திருமணம். 
….
தாயின் 
கருவரையில் 
ஒரு 
உயிரில்  இருந்து 
ஒரு  உயிர்  பிறப்பது 
கருமணம் 
ஒரு  உயிருக்காக 
ஒரு  உயிர்  பிறந்து  
பூமியில் 
பூமி தாயின்  மடியில்  இணைவது 
திருமணம். 
….
இரண்டுமே 
இறைவனால்  தீர்மானிக்கப்பட்டவை .

பூமியில் 
இல்லறத்தில் இணையும் 
தம்பதிகள் 
தம்  பதிகளே…
தத் தம் பதிவுகளின்  விளைவுகளே 
என்பதை 
உயிராக  உணர வேண்டும். 

நடந்த 
மண  வாழ்வில் 
இன்பம்  துன்பம் 
நல்லவை  அல்லாதவை 
பிடித்தது  பிடிக்காதது 
எது நடந்தாலும் 
நடந்து  முடிந்தது 
நடப்பது 
சிவ  கணக்கே  
என  உணர 
எந்நாளும் 
சிவத்தை 
சிவத்தின்  கரத்தை 
அன்பால்  தொடர 
என்றும் 
எவ் உயிருக்கும்  
நன்மையே 
ஆனந்தமே  …
….
கரு மணமாகி 
திருமணமாகும் 
அனைவரையும் 
சிவம் 
என்றும் 
ஆசியோடு ஆசீர்வதிக்கும் 
வாழ்க  வாழ்க  வாழ்க  
சிவ 
அக  புற  ஆனந்தமாக 
வாழ்க  வாழ்க வாழ்க  வாழ்க !!!
 

Leave a Reply