கவிதைகள் !!

தொடர் மழை – சிறிதும் கரையவே இல்லை….. மலரின் நிறம்..! —————————————– இமைகள் மூடியதும் விழித்துக் கொண்டது காதலியின் நினைவு.! —————————————– உப்பு மூட்டை சுமக்கையில் பாரமே தெரியவில்லை முதுகில் குழந்தை.!
 
இறகுகளில் இடம் தா… ———————-+————— காற்று எந்தன் காதில் ஒரு கவிதை சொன்ன தின்று ஆற்று வெள்ளம் போல ஒரு ஆசை பிறந்த தின்று. மாற்று வழி வேறின்றி மனம் ஊற்றாய் பொங்கு தின்று கூற்றில் உறை நிலவே உனை போற்றும் விதம் அறியேனே. வாழ்வில் ஒளி தந்து எந்தன் வானில் பிறை நிலவாகிறாய் கனவில் கதை பேசிக் காதல் சோலைக்கு மலரா கிறாய்… இசை யொன்றை மீட்டும் முன் ஓசைக்கு சொல் லாகிறாய்.. திசை யெங்கு நோக்கி டினும் அசையும் உரு நீயாகிறாய்… என் கவியூற்றின் ஆதி முதல் அந்தமென தித்திக்கும் கருவாகிறாய்.. கண் பாவைக்குள் ஒளி யாகி எண்ணத்தில் பதிவா கிறாய்… பேச்சின்றி மௌனங்களில் உற வாகி மூச்சலையும் கூட்டுக்குள் உயிராகிறாய்… இறகான மனதிற்கு இனியுந்தன் உயிரான சிறகுகளில் இடம்தா பெண்ணே…

Leave a Reply