கவிதைகள் !!

உனக்காக அழுகிறேன் கண்களை மூடினேன்…. உன்னோடு நான் சிரித்து மகிழ்ந்த நேரங்களை அசை போட்டது மனம்…. கண்கள் திறக்க மறுத்தன நீ பிரிந்த காரணம் அறியாமல் இமைகள் நீர் கொண்டு இறுகியதால்…. சுய பரிதாபம் தற்கொலைக்கு சமம் என அறிந்தும் மனம் கொண்ட வேதனையால்விழி சிந்தும் நீரை அறிவு இட்ட ஆணையாலும் விரல் துடைக்கவில்லை…. ஆயுள் முழுதும் அழுதாலும் வழிந்தோடும் கண்ணீரால் என் காயம் கழுவ முடியாது தான்… ஆனாலும்.. வழியின்றி வலியோடு அழுகிறேன் உனக்காக என்றும்…..

Leave a Reply