கவிஞர் வைரமுத்து!!

ஐந்து அறிவு  பெரிது,
ஆறு  அறிவு சிறிது 
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
🐇🕊எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
🏢எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
🐅🐆🐘🐃கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
👨🏻மனிதா
இதை
மனங்கொள்
🐂🐄கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
💑ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
🕊புறாவுக்கு வாழ்க்கை
🕊எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
🐅🐘🐆பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
🕊அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள் அங்கிங்கும் அலை மோதும்
மானிடா. இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மாண்டால் –
🐲மானின் தோல் ஆசனம்
🌳மயிலின் தோகை விசிறி
🐘யானையின் பல் அலங்காரம்
🐫ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
👇
மானிடா 
         நீ மாண்டால் …
சிலரை
மண் கூட  நிராகரிக்கும்
என்பதால் தானே
நெருப்பில் போட பழகினோம்
**

Leave a Reply