முருகாசரணம்!!

முருகன் என்று அழைத்தால் என்ன குமரன் என்று அழைத்தால் என்ன கந்தன் என்று சொன்னால் என்ன கார்த்திகேயன் என்றால் என்ன எப்படியும் அழைக்கலாம் முருகா உன்னை எங்கிருந்தும் காணலாம்! அறுபடையின் ஆண்டவனை ஆண்டி வேடம் கொண்டவனை சரவணனைச் சண்முகனை சாமிநாத குருபரனை எப்படியும் அழைக்கலாம் முருகா உன்னை எங்கிருந்தும் காணலாம்! செந்தில் வடிவேலனை சிந்தையில் வாழ்பவனை அன்பு வடிவானவனை அழகுமயில் வாகனனை எப்படியும் அழைக்கலாம் முருகா உன்னை எங்கிருந்தும் காணலாம்! செந்தமிழ் தந்தவனை வந்தனைகள் செய்திடவே எந்த சொல் முந்தாது எல்லாமே மந்திரமாம் எப்படியும் அழைக்கலாம் முருகா உன்னை எங்கிருந்தும் காணலாம்! #முருகாசரணம்

Leave a Reply